Wednesday, February 19, 2014

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர்  சுபபிரியா. இவர் நீரிழிவுநோய் பற்றியும், நோய்தடுப்பு முறைகள் பற்றியும் தரும் ஆலாசனைகளை பார்ப்போம். பொதுவாக இந்த தலைமுறையினரை  அதிகமாக பாதிக்கும் நோயாக நீரிழிவுநோய் உள்ளது. இதற்கு காரணம் சர்க்கரைநோய் குறித்து நமக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததே. 

நோயை கட்டுபடுத்தும் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் கேட்பதோடு சரி அதை பின்பற்றுவது கிடையாது. சர்க்கரைநோய்க்கு  முக்கியகாரணம் அவசர உணவு. அதாவது பீசா, பர்கர், மேகி போன்ற உணவை தேடிச்செல்கிறோம். உலகளவில் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட  நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு முறை சர்க்கரைநோய் வந்தால் அதற்காக வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்.

சத்தான கேழ்வரகு, காய்கறிகள், போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோயை தவிர்க்கலாம். தற்போது உள்ள அறிவியல்  முன்னேற்றத்தால் சர்க்கரை இன்சூலின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூங்கபோகும் போது கால்களை பார்க்க வேண்டும். அப்போது வழக்கத்துக்கு மாறாக  கால்கள் வீக்கமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சர்க்கரைநோயால் கால் இழப்பு அதிகரித்து வருகிறது. 

திடீர் உடல் பருமன் குறைவு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, பிறப்பு உறுப்பில் புண், அரிப்பு ஏற்படுதல் சர்க்கரை நோய்க்கு அறிகுறியாகும். சர்க்கரை  நோய்க்கு மருந்து உட்கொள்வதை தவிர்த்து இன்சூலின் எடுத்து கொள்ளலாம். இதில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆரோக்கியமான உணவு வகைகள்,  காய்கறிகள் உட்கொண்டால் எந்த நோயும் நம்மை தாக்காது ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment